# cp > கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு. - கோப்பை நகலெடு: `cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பிற்குப்/பாதை}}` - கோப்பை நகலெடுத்து அடைவொன்றிற்குள் அதே பெயருடன் வை: `cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பின்/தாயடைவிற்குப்/பாதை}}` - அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக நகலெடு: `cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` - அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக வளவள நிலையில் (நகலெடுக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகலெடு: `cp -vr {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` - அடைவின் உள்ளடக்கத்தை நகலெடுத்து இன்னொரு அடைவிற்குள் வை: `cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை/*}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` - txt வகைப்பெயருடையக் கோப்புகளை ஊடாட்ட நிலையில் (ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தக் கேட்கும்) நகலெடு: `cp -i {{*.txt}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`