tldr/pages.ta/windows/wsl.md

37 lines
2.0 KiB
Markdown

# wsl
> லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை கட்டளை வரியிலிருந்து நிர்வகிக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows/wsl/reference>.
- லினக்ஸ் ஷெல்லைத் தொடங்கவும் (இயல்புநிலை விநியோகத்தில்):
`wsl {{ஷெல்_கட்டளை}}`
- ஷெல்லைப் பயன்படுத்தாமல் லினக்ஸ் கட்டளையை இயக்கவும்:
`wsl --exec {{கட்டளை}} {{கட்டளை_வாதங்கள்}}`
- குறிப்பிட்ட விநியோகத்தைக் குறிப்பிடவும்:
`wsl --distribution {{விநியோகம்}} {{ஷெல்_கட்டளை}}`
- கிடைக்கக்கூடிய விநியோகங்களின் பட்டியல்:
`wsl --list`
- விநியோகத்தை `.tar` கோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்:
`wsl --export {{விநியோகம்}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}`
- `.tar` கோப்பிலிருந்து விநியோகத்தை இறக்குமதி செய்:
`wsl --import {{விநியோகம்}} {{நிறுவல்_இடம்\பாதை}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}`
- குறிப்பிட்ட விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் `wsl` பதிப்பை மாற்றவும்:
`wsl --set-version {{விநியோகம்}} {{பதிப்பு}}`
- லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை மூடவும்:
`wsl --shutdown`